புதிய கல்வி கொள்ளை(கை)

timthumb.php

Image credits google

வில் வித்தையை கற்று கொண்ட காரணத்தினால் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டி வாங்கிய துரோணாச்சாரியாரை பற்றிய உன்னதமான புராண கதையை இது வரை யாரும் மறந்து இருக்க முடியாது. குருவின் துயில் கலைந்து விட கூடாது என்பதால் சிலந்தி கடியின் வலியை தாங்கி கொண்ட கர்ணன் ஷத்ரியன் என்ற ஒரே காரணத்தினால் தேவை ஏற்படும் போது கற்ற வித்தை மறந்து போகும் என்று சாபம் அளிக்கும் பரசுராமரை கொண்டாடும் தேசம் இது. பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதி இந்துக்களுக்கு மட்டுமே கல்வி என்ற குருகுல முறையில் இருந்து அனைவர்க்கும் கல்வி என்ற நிலை கடந்து வந்த பாதை பல போராட்டங்களை உள் அடக்கியது.

 

வரலாறு

1948-1949 ம் ஆண்டு ராதாகிருஷ்ணனின் தலைமையிலான கல்வி குழு கிராமப்புறங்களில் கல்வியின் தேவையை வலியுறுத்தியது.1952–1953 ம் ஆண்டு கல்வி கமிஷன பாட திட்டங்களை விரிவு படுத்தவும், கிராமப்புறங்களில் விவசாய கல்வியின் தேவையையும் பரிந்துரைத்தது. இன்று பரவலாக காணப்படும் 10+2+3 முறை மற்றும் உதவி தொகை 1964-1966 ம் ஆண்டு கோத்தாரி கமிஷனால் பரிந்துரைக்கப்பட்டது.பள்ளிகளில் மட்டும் அல்லாமல் அலுவலகங்களிலும் ஜாதிய இட ஒதுக்கீடை மண்டல் கமிஷன் (1979) பரிந்துரைத்தது. கோத்தாரி கமிஷனின் பரிந்துரையை கொண்டு 1968ம் ஆண்டு 14 வயதுக்கு உட்பட்ட அனைவர்க்கும் கட்டாய கல்வி என்ற தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்றியது. 1986ம் ஆண்டு உதவி தொகை பரவலாக அதிகரிக்கப்படுவதற்கு, ஏழை மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதற்கு மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஆசிரியர்களை நியமிப்பதற்கும் புதிய திட்டம் அறிமுக படுத்தப்பட்டது. 1992ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு JEE AIEEE போன்ற பொது நுழைவு தேர்வு அறிமுக படுத்த பட்டது.

 

புதிய கல்வி கொள்கை 2016

சமஸ்க்ருத கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும், கல்வியில் தனியார் முதலீடுகளை வரவேற்கவேண்டும், 5ம் மற்றும் 8ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி, தொழிற் கல்வி வழங்குவது, இணையதள பாடங்கள் பண பரிமாற்றங்கள், யோகா பயிற்சியை கட்டாயம் ஆக்குவது, வெளிநாட்டு கல்வி நிலையங்களை அமைப்பது, இந்திய கல்வி நிலையங்களை நெளிநாட்டில் அமைப்பது, வெளிநாட்டு ஆசிரியர்களை இந்திய கல்லூரிகளில் நியமிப்பது போன்ற பல பரிந்துரைகளை புதிய கல்வி கொள்கை வைத்து உள்ளது.

 

மறுக்கப்படுகிறதா கல்வி?

ஆங்கிலத்தில் பரவலாக உபயோக படுத்த படும் “THE HISTORY REPEATS ITSELF” சொல்லாடலை போல் நாம் மீண்டும் பின்னோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம். அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்படும் அபாயம் வெகு தூரத்தில் இல்லை. மற்ற கல்வி கொள்கைகளில் பல தரப்பினருக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் ப.ஜ.க. வை தவிர அணைத்து கட்சிகளாலும் கல்வியாளர்களாலும் எதிர்க்கப்படும் கல்வி கொளகை என்ற பெருமை இதையே சேரும். அணைத்து தரப்பினர், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் மற்றும் மாணவர்களின் ஒப்புதலுக்கு பிறகே இந்த கொளகை வரையறுக்க பட்டது என்று ஸ்ம்ரிதி இரானி கூறுகிறார் ஆனால் நிதர்சனத்தில் பல மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட புதிய கல்வி கொள்கை பற்றிய அறிமுகம் இல்லை. இப்பொழுது தான் “இந்த கொள்கை யாருடைய ஒப்புதலின் பெயரில் வரையறுக்க பட்டிருக்கிறது?” என்று ஒரு  புதிய கேள்வி எழுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்த கல்வி கொள்கை என்ற சீதாராம் யெச்சூரியின் குற்றச்சாட்டை இத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் நமது கேள்விக்கான விடை கிடைத்து விடும்.

இக்கொள்கையின் படி கல்வியை தரப்படுத்துவது என்பது கல்வியை சர்வதேசமையம் ஆக்குவது, அதாவது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவில் நிறுவுவதும் இந்திய கல்வி நிறுவனங்களை வெளிநாடுகளில் நிறுவுவதும் ஆகும். இதில் இவர்களின் வியாபார நோக்கு துளியும் சந்தேகமின்றி வெளிப்படுகிறது. புதிய கல்வி நிறுவனங்களே அமைக்கப்படாது என்ற சிறந்த பரிந்துரை இந்த கொள்கையில் உள்ளது, இதுவரை எந்த அரசாலும் அறிவிக்கப்படாத ஒரு அருமையான திட்டம் இது.

தற்பொழுது ப.ஜ.க. அரசால் அறிமுகம் படுத்தப்படும் நீட், அணைத்து பள்ளிகளிலும் கட்டாய யோகா பயிற்சி, கட்டாய சம்ஸ்க்ருத கல்வி போன்ற திட்டங்கள் புதிய கல்வி கொள்கையின் செயலாக்கமே ஆகும். ஆதலால் கபில் சிபில் சொல்வதை போல் இந்த கொள்கை ஆவணத்தை குப்பையில் போடுவதை தவிர சிறந்த செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

One Team, One Heartbeat

பாஜக அரசின் மூன்று ஆண்டு கால சாதனை

ஆரிய திராவிட போர்

HAKUNA MATATA

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

2 thoughts on “புதிய கல்வி கொள்ளை(கை)

  1. உங்களின் இந்த கல்வி கட்டுரைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
    👌🏼👌🏼

    Liked by 1 person

Leave a comment