ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

 

neet
Image credits Google

அரசின் தோற்றத்தில் இருந்தே அதன் நிலைப்பாடு மக்களுக்கு எதிர் ஆனதாகவே இருந்து வருகிறது. மருத்துவ படிப்பு ஒரு விதி விலக்கு அல்ல என்பதை நிரூபிக்கவே நீட் எனப்படும் நேஷனல் எண்ட்ரன்ஸ் கம் எலிஜிபிலிட்டி டெஸ்டை பொதுமை படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் வரையறை மக்களுக்காக, மக்களால், மக்களுக்கான அரசில் இருந்து செல்வந்துருக்காக, செல்வந்தர்களால், செல்வந்தற்கானதாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கு மட்டும் அல்லாமல் பொறியியல் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கும் நீட் தேர்வினை அறிமுகம் படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, இருக்கும் திட்டங்கள் போதாது என்று புதிய கல்வி கொள்கை வேறு. இதற்கு நாம் விரைந்து வினையாற்றா விட்டால் இத்திட்டங்கள் நம்மை மீண்டும் குல கல்வி முறைக்கு மாற்றவே வழி வகுக்கும்.

வாதங்கள்

நீட்டினை ஆதரிக்கும் பெரும்பாலானோர் முன்வைக்கும் கருத்து தங்களுக்கு தரமான மருத்துவர்கள் வேண்டும் என்பது தான் ஆனால் ஒரு மருத்துவர் படித்து முடித்து பயிற்சிக்கு பின்பே முழுமையான மருத்துவர் ஆகிறார் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். தரம் என்று வாதிடுவதற்கு முன்பாக அரசு பள்ளியின் தரத்தை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். சமச்சீர் பாட திட்டம் என்று வரும் போதும் சிபிஸ்இ எனப்படும் சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜூகேஷனுக்கு இதில் விலக்கு உள்ளது. நீட்டில் கேட்க படும் பெரும்பாலான கேள்விகள் இந்த சிபிஸ்இ பாட திட்டத்தை சார்ந்தே உள்ளது. இந்த சிபிஸ்இ பள்ளிகளில் வசூலிக்க படும் கட்டணம் மற்ற பள்ளிகளை விட அதிகம். நீட் பயிற்சிக்காக நிறைய பயிற்சி மையங்கள் முளைத்து உள்ளன இது மற்றொரு வகையில் பணத்தை சுரண்டும் ஏற்பாடாக உள்ளது. இவர்களால் மேற்கோள் காட்டப்படும் ஐஐடீ, ஐஐம், எய்ம்ஸ் போன்ற பல உயர் நிலை கல்லூரிகள் உலக தர பட்டியலில் முதல் நூறு இடத்தில ஒன்றை கூட பிடிக்க முடியவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடால் நிறைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர், நீட்டால் இந்த நிலை மாற கூடும். இந்த நிலை தொடர்ந்தால் ஏழைகளுக்கு மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்திற்கும் மருத்துவ படிப்பு எட்டா கனி ஆகிவிடும் அபாயம் உள்ளது.

பின்னணியில் இருக்கும் அரசியல்

“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற அண்ணாவின் வாசகத்தை இன்று வரை நம்மால் பொருத்தி பார்த்துக்கொள்ள முடிகிறது. பாஜகவினர் ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து தங்களது காவி வெறி செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். காவி கால ஊன்ற முடியாத மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் விஷத்தை உமிழ்கிறார்கள். நாடு முழுக்க ஒரே நுழைவு தேர்வு என்று சொல்லிவிட்டு வெவேறு வினா தாள்கள் அளிப்பதும், விதி என்ற பெயரால், தேர்வு நடைபெறுமா நடைபெறாதா போன்ற பல குழப்பங்களோடு தேர்வு எழுத வரும் மாணவ மாணவியரின் உள்ளாடைகளை கிழித்து எறிவதும் இந்த அரசின் வஞ்ச முகத்தை காட்டுகின்றது. நம்மை நீட்டுக்கு எதிராய் வாதிடும் போக்கில் இருந்து மாற்றி நீட் தேர்வு நடைபெறும் முறைக்கு எதிராய் வாதிட வைத்ததே இந்த அரசின் மிக பெரிய சாதனை. அரசு எண்ணிய படியே நாம் நமது நோக்கத்தில் இருந்து சிதறி விட்டோம். அதனால் தரம் என்ற ஒற்றை கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் பல கோணத்தில் இருந்து இதனை ஆயவு செய்வது அவசியம் ஆகும்.

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

Advertisements

கிறுக்கல்

உன் உடன் நான் இருந்தால் என் கண்கள் பேசும்
உன்னை நான் பிரிந்தால் என் கணீர் பேசும்.

எந்தன் தொலைபேசி அலைகள் உன்னை சேரும் முன்னரே
என் நினைவலைகள் உன்னை சேர்ந்து விடும்.

எனக்கு மிகவும் பிடித்த மனிதருக்கு பிடிக்காத சொல் சொல்லவில்லை,
comment அடிக்கவில்லை,
உடை உடுத்தவில்லை,
பாடல் பாடவில்லை ,
அவருக்கு சற்றும் பிடிக்காத என்னை , என்ன செய்வது…?

என்னவன்னுக்காக, என் மொழியில், என்ன எழுதினாலும், அவை அத்தனையும் கவிதையாய்
மாறி போகும் மாயத்தை எண்ணி நான் வியக்கிறேன்.

அவனை எண்ணி எண்ணி நான் அழிந்தேன்,
அவனை எழுதி எழுதி அழிந்தது என் தட்டச்சும்,
அழியவில்லை அவன் ஆணவம் மட்டும்.

key noard

உன்னுடன் பருகினால் சாலை ஓர தேநீர் விடுதியின் குழம்பி (coffee) கூட சுவைக்கிறது.
உன் புன்னகை என்னை தொற்றி கொள்ளும் போது இன்னும் பல தேநீர் விடுதி சந்திப்புகள் நிகழாத என்று
மனம் ஏங்குகிறது.

I hate you…
When I can cross miles for you…
I hate you more…
When you can’t even step out of your house…
I hate you…
When I can write volumes for you…
I hate you more…
When you do the same for other girls…
I hate you…
When you top my preference list…
I hate you more…
When I become your backup choice…
I hate you…
When I can spend a full day with you…
I hate you more…
When you want only my night…
I hate you…
When you break my heart into pieces…
I hate you more…
When the broken pieces cry your name…
I hate you…
There is no instrument to measure the human evilness…
I hate you more…
Even the advanced one will fail to detect your evilness…
And most of all I thank you…
For showing the strength in me (the writer in me)…

படித்ததில் பிடித்தது 

மழையை பார்த்து பூமி கேட்டது எத்தனை முறை நீ விழுவாய் என
தாங்கிக்கொள்ள நீ இருக்கும் வரை என்றது மழைத்துளி.

எனது மரணம் உன் கண்களில் இருந்து ஒரு துளி நீரை வரவழைக்கும் அனால் சொல்
அந்த மரணத்தையும் தாண்டி நான் உயிர்த்திருப்பேன்.

எழுத்து பிழையினை சரி பார்த்ததற்கு நன்றி மைது.

கிறுக்கல்

Ai Birraany…

Biryani

biryani 1

Image credits google

People eat to live but foodies like me live to eat. When it comes to Biryani my heart skips a beat with excitement. Few say that biryani originated from mughlas and few say it originated from south of India and given a twist by adding few more ingredients to it. Whatever may be the origin, biryani has become the layman food. Biryani is universal, you can find biryani anywhere and everywhere, though there are few favorite spots like Hydrabad, Malabar, Ambur, Mughlai, Lucknow and the list goes on and on… Coming to namma Chennai Periyamedu and Egmore are considered the best places by biryani lovers. There may be so many varieties and variations in biryani but bai biryani tops the list (bai uttu biriyani than best).

Ingredients and side dish

biryani 2

Image credits google

You can make different biryanis by adding different ingredients, add chicken to it, it becomes chicken biryani, add fish to it, it becomes fish biryani, add egg to it, it becomes egg biryani, add prawn to it, it becomes prawn biryani. Adding mutton to it takes the game to yet another level. Soaking the mutton in tenderizer before cooking it, for 1 to 2 hour, and cooking it to the perfection is an art. The layered hyderabadi biryani is what I call paradise. From the first layer of crispy crunchy fried onion and saffron to the second layer of geed rice to the last layer of tender mutton with the gravy.

Biryani goes well with anything and everything. You can have biryani with onion raita, brinjal curry, eggs, masala coated seer fry (vanjaram fry), chicken 65, mutton gravy etc. I have got a friend who has his biryani with pickle (stunned…?? Biryani is the only thing that can give you never ending surprises).

Age is not a barrier

biryani

Image credits google

Not just age, biryani has got “no” barrier. My neighbors’ 2 year old toddler had to stay in our house; he never stopped crying, once my mom opened the lid of the biryani container, the aroma filled the room and when it reached his nostrils, he jumped with joy and started to sing “Ai, birraany…birraany…birraany…”  (biryani has no age barrier). A vegetarian friend of mine has biryani occasionally without the knowledge of her family (oops… I’m sorry “a non-vegetarian friend of mine”, caste or religion is not a barrier when it comes to biryani). My aunt, the day she gave birth to a baby had biryani for her lunch, fortunately the hospital she was admitted in was situated just near Buhari, one of the famous biryani outlet (nope, I’m not paid for portraying their name). My grandpa’s 65 year old younger sister is prone to all the modern age diseases. She can’t resist having biryani. “Shhh… naan biryani saapudurenu yaar kittayum solladha di” (Shhh… don’t say anyone that I’m having biryani) is her constant dialogue, because biryani knows no rules. Age, gender, caste or religion no such nonsense can act as a barrier to biryani. Biryani = Bliss.

Thank you, Ramya and Mythu the two biryani lovers for asking me to work on this topic. Guyssss…. Will catch you people with next blog, Birraany… arriving…

மே தினம்

May Day celebrations in Bangladesh
Image credits – google

இந்த ஒரு நாள் மட்டும் உலகமே உழைப்பாளர்களை தூக்கி வைத்து பேசும். இந்த ஒரு நாள் மட்டும் ஜனநாயக முகமூடி அணிந்த முதலாளித்துவ அரசு ஏதோ உழைப்பாளர்களுக்காகவே உருவெடுத்ததை போல் உரை ஆற்றும். இந்த ஒரு நாள் மட்டும் காணும் இடம் எல்லாம் செங்கொடி பறக்கும். இந்த ஒரு நாளில் மட்டும் ஊடகங்களில் “உழைக்கும் மக்கள் உள்ளம் காய் ரெட் ரெட்” போன்ற பாடல்கள் ஒளிபரப்பப்படும். அடுத்த நாள் உழைப்பாளிகளின் உரிமைகளை குறித்து பேசினால் இவர்கள் யாரும் சீண்ட கூட மாட்டார்கள், ஏன் என்றல் இவர்கள் யாருக்கும் உழைப்பாளர்கள் நலன் மீதான உண்மையான அக்கறையோ புரிதலோ இல்ல. இன்று காலை ஒரு தோழர் உடன் உரையாடும் பொது அவர் பணி சுமை காரணத்தினால் 2 நாள் உறங்காமல் இருந்தார், உழைப்பாளர்கள் தினத்தன்று கூட உழைப்பாளருக்கு ஓய்வு இல்லையா என்று கேட்டதற்கு அவர் தேவை ஓய்வு அல்ல சுரண்டலில் இருந்து விடுதலை என்றார், பாவம் அவருக்கு நேர சுரண்டல் ஒரு சுரண்டலாய் தெரியவில்லை போல. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பது உழைப்பாளர் தின முழக்கத்துக்கான ஒரு வாசகமாக மட்டுமே மாறி போனது.

பெண்களின் பங்கேற்பு

ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தன்று எங்கள் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெறும். கட்சி அலுவலகம் வீட்டின் கீழேயே என்பதால் அம்மா வரும் தோழர்களுக்கு டீ போட்டு கொண்டு இருந்தார். டீ போட்டு முடித்ததும் அவள் பனி முடிந்ததை கருதி ஓய்வு எடுக்க ஆரம்பித்து விட்டார். கீழே இறங்கி சென்ற அப்பா அம்மாவையும் என்னையும் ஒரு பேச்சிற்கு கூட அழைக்கவில்லை. பெண்களே பங்கேற்காத அந்த மே தின விழா இனிதே நடந்து முடிந்தது. சமையல் அறையின் ஜன்னல் ஓரம் நின்று கொண்டு இருந்த போது அப்பா பெண்களின் உரிமையை குறித்து தோழர்களுடன் உரையாடிக்கொண்டு இருப்பதை கேட்க முடிந்தது. ” யாருமே இல்லாத கடைல யாருக்கு டா டீ ஆத்துறிங்க ” என்ற விவேக்கின் வசனத்தை போல் பெண்களே இல்லாத சபையில் பெண் உரிமையை பற்றி அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இது ஒரு சாதாரண வீட்டில் நடைபெற்ற சம்பவம் அல்ல, பெரியாரையும், மார்க்ஸ்யும் பேசும் ஒரு முற்போக்கான வீட்டில் நடந்தேறிய ஒரு அருமையான சம்பவம். இது இந்த இடத்தில மட்டும் அல்ல, நான் இன்று பார்த்த, கலந்துகொண்ட எந்த ஒரு மே தின கூட்டத்திலும், பேரணியிலும் பெரிதாய் பெண்களை பார்க்க முடியவில்லை. முதலில் முற்போக்குவாதி என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் ஒவொரு ஆணும் தங்கள் வீட்டு பெண்களை பொது தளத்தில் இயங்க விட வேண்டும். இவ்வித தடைகளை அனைத்தும் உடைத்து ஏதோ ஒரு கூட்டத்திற்கு பெண்ணே போராடி சென்றாலும் அங்கு உள்ள ஆண் தோழர்கள் ” என்ன போன கூட்டத்துக்கு வரல போல, உங்க கூட்டத்துக்கு நீங்களே வர மாட்டிங்களா” என்று கேட்டு விட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்கள். இதில் நான் ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை பெண்களிடம் இருக்கும் ஆணாதிக்க மனோபாவம் தான் மிக பெரிய சிக்கலாக உள்ளது. ஏன், பெண்கள் யாரும் உழைப்பது இல்லையா, இல்லை பெண்களை உழைப்பாளியாகவே இவர்கள் கருதவில்லையா…??

உழைப்பாளர்களின் இன்னல்கள்

இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் இன்னும் 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியப்படவில்லை, தொழிற்சங்கங்களே அமைக்க முடியாதவாறு சூழல் நிகழ்கிறது. விடுப்பு கேட்டால் ஒரு மணி நேரம் அனுமதி கொடுப்பதும், ஒரு மணி நேர அனுமதி கேட்டால் அதை நிராகரிப்பதும் இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. உழைப்பது பெண்ணாக இருந்தால் இன்னும் பல சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும், அங்கங்கே பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க நிமிடத்திற்கு ஒரு முறை உடையை சரி செய்வதில் தொடங்கி, வீட்டில் இருக்கும் குழந்தையை குறித்த பயம் வரை அவர்களுக்கு அனைத்துமே சிக்கல் தான். இன்னும் உழைக்கும் மக்கள் ஓடாய் தேய்ந்துகொண்டும், உலக முதலாளிகள் அவர்களை சுரண்டிக்கொண்டும் தான் இருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்பது கானல் நீராகவே இருக்கின்றது.

மே தினம்

நவீன தீண்டாமை

நவீன தீண்டாமை

blog image

Image credits Alex-Prosser

அவனை தொட்டால் தீட்டு, இவனை பார்த்தால் தீட்டு என்று சொன்ன காலம் மலையேறி விட்டதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இவ்வகை தீண்டாமை அனைத்தும் வெவேறு ரூபத்தில் இன்றும் தாண்டவம் ஆடி கொண்டு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே ரோஹித் வெமுலா, சரவணன் மற்றும் முத்து கிருஷ்ணன் போன்றோரின் மரணம் அமைந்துள்ளது. பார்ப்பனிய ஆதிக்கம், ஜாதிய ஒடுக்கு முறையினால் தோளில் சீலை அணிவது, தூய்மையான நீரை பருகுவது, அனைவரும் செல்லும் பாதையை பயன் படுத்துவது போன்ற அடிப்படை உரிமைகளுக்குக் கூட போராடவேண்டி இருந்தது. இந்த நிலை சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாறவில்லை என்பதை எண்ணும் பொது, பகுத்துஅறியும் முற்போக்கான எந்த ஒரு மனிதருக்கும் இந்திய அரசியல் அமைப்பு, அதன் செயல்பாடு, அதன் திட்டங்கள் மீது கோபம் வருவதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.

கல்வி

அன்றைய குல கல்வி முறையில் ஆரம்பித்து இன்றைய மெக்காலே கல்வி முறை வரை எதுவும் மாறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. கூர்மையாக உற்று நோக்கினால், சமீப காலமாக, இந்த நிலை இன்னும் மோசமாகி வருகிறது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இட ஒதுக்கீடை எதிர்க்கும் மனோபாவத்தை பாமரர்களிடம் திட்டமிட்டு தினிக்கின்றது இந்த பார்ப்பனிய, முதலாளித்துவ அரசும், கைக்கூலி ஊடகங்களும். உயர் ஜாதியினரைத் தவிர வேறு யாரும் கல்வி பயில முடியாத நிலையில் இருந்து தாழ்த்த பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கல்வி பயில ஆரம்பித்ததை பொறுத்து கொள்ள முடியாத இந்த ஜனநாயக முகமூடி அணிந்த அரசும், அதிகாரிகளும், ஏன் பாடத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் கூட இந்த சமூகத்தை சேர்ந்த மக்களை இழிவு படுத்துவது மட்டும் அல்லாமல் வாய்ப்பு கிடைத்தால் அவர்களை கொன்றும் குவிக்கிறார்கள். அன்று தூரத்தில் இருந்து வில் விதையை கற்று கொண்ட ஏகலைவனின் கட்டை விரல் துண்டிக்கப் பட்டது இன்று உரிமையோடு உயர் கல்வி நிறுவனங்களில் பாடம் பயிலும் முத்து கிருஷ்ணன்களின் உயிர் பறிக்க படுகின்றது.

சமூகம்

இவ்வித இன்னல்கள் கல்வி நிலையங்களை கடந்த உடன் முடிந்து விடும் என்று கற்பனையில் கூட எண்ண முடியவில்லை. பல இன்னல்களை கடந்து சாதிக்கும் தருணத்திலும் அதன் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் ” இவன் இட ஒதுக்கீட்டில படிச்சவன் தானே? ” என்ற ஏளனமான கேள்வியை இந்த சமூகம் அவர்களை பார்த்து கேட்கின்றது. இப்பொழுது ஜாதி பார்ப்பதில்லை, எல்லோரும் முன்னேறி விட்டார்கள் என்று வாதிடும் மூடர்கள் எந்த உயர் ஜாதியினரும் சாக்கடை அள்ளுவதில்லை என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். தங்களது கழிவையே அகற்ற முகம் சுளிக்கும் இவர்கள், சொகுசு வாழ்வு வாழ்வதற்கு ஜாதிய இட ஒதிக்கீடை தடுக்க திட்டமிட்டு கொண்டு இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களில் சர் நேம் என்ற பெயரில் ஜாதி பெயரை இணைத்து கொள்வதும், அதன் மூலம் வேலையில் அமர்வதும் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இட ஒதுக்கீடை எதிர்க்கும் இந்த உத்தமர்கள் யாரும் ஜாதியை எதிர்ப்பது இல்லை. ஆதிக்கச் சாதியினரின் நலனுக்கான இந்த சமூகம் என்னும் சதுரங்கம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு செக் வைத்து கொண்டே இருக்கிறது அனால் அதையும் தாண்டி இவர்கள் மகுடம் சூடி கொண்டே இருக்கிறார்கள்.