என்றும் பெரியார்

ஈரோட்டுக் கண்ணாடி, கருப்பு சட்டை, கைத் தடி, வெள்ளைத் தாடி இந்தக் குறியீடுகளின் மீது நான் மீண்டும் மீண்டும் காதலில் விழுகிறேன். திராவிட தந்தை, எங்கள் ஆசான், எம் காதலன், தந்தை பெரியாரை, அவரது கருத்துக்களை நேசிக்காமல் யாரேனும் இருந்துவிட முடியுமா என்ன?

சுய மரியாதை
திராவிட இனத்திற்கே உரித்த சுய மரியாதையைக் கற்றுக்கொடுத்ததும், தட்டி எழுப்பியதும் எங்கள் தந்தை பெரியார். பிறப்பால் பெண் என்பதாலும், இந்திய சாதிய படிநிலைகளாலும் அடிமைப்பட்டு போயிருந்த நம் சமூகத்தை இந்த நிலைக்குக் கொண்டு வர ஒரு தந்தையாக அவர் நடத்திய போராட்டங்களை பட்டியல் இட முடியாது. சுய மரியாதை என்பது அடிப்படை பிறப்புரிமை என்று தெரிந்த அவர் மனிதனை மனிதனே அடிமைப் படுத்தும் இழி நிலையை வன்மையாகச் சாடினார். மானத்தை அடிப்படையாகக்கொண்டு ஏற்பட்டதே “மனிதன்”, “மானிடன்” போன்ற சொற்கள் என்பதைக் குறிப்பிடும் பெரியார் மனிதனுக்குத் தன்மானம் தான் மிகவும் முக்கியம் என்பதையும் விளக்குகிறார். மனிதன் மீது மனிதன் சவாரி செய்வது, மனிதனை மனிதனே சுமப்பது, மனித மலத்தை மனிதனே அள்ளுவது போன்ற மனிதம் அற்ற செயல்களை வேரறுக்க முயற்சித்தார். யாரைவிடவும் யாரும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை எல்லோரும் சமம் என்ற கருத்தியலை தனது திராவிட பிள்ளைகளுக்கு ஆழ விதைத்தவர் தந்தை பெரியார்.

6846749383_f4464152f3_b

கல்வி
நீ கல்வி பயின்றால் ஈயத்தைக் காய்ச்சி கண்ணுலயும் காதுலயும் ஊற்றுவேன் எனச் சொல்லி சிலர் மட்டும் கல்வி கற்றுக்கொண்டு இருந்த சூழலில் பெண்களும் சூத்திரர்களும் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் சாதிய இட ஒதிக்கீடை கொண்டு வந்தது எங்கள் ஆசான். யார் நம்மைப் பார்த்து “நீ எல்லாம் எப்படி படிக்கலாம்? நீ எல்லாம் படிக்கச் கூடாது” என்று சொன்னார்களோ இன்று அவர்களுக்கு நேர் எதிரே அமர்ந்து கொண்டு அவர்களுக்கு இணையான அல்லது அவர்களை விட உயர்ந்த பதவியில் இருக்கிறோம் என்றால் அதற்கு நாம் நமது ஆசானுக்குத் தான் கடமைப்பட்டு இருக்கிறோம்.
ஏட்டு கல்வி மட்டுமே முழுமையான கல்வி அல்ல என்பதை நம்பிய பெரியார் சமூகத்தில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார். பட்டதாரி என்பதால் மட்டும் ஒரு நபர் அறிவாளி அல்ல, பகுத்தறிவதே உண்மையான அறிவு என்பதை விளக்குகிறார் பெரியார். என்னத் தான் மருத்துவராகவே இருந்தாலும் பகுத்தறியா விட்டால் கோமியம் நோயை குணப் படுத்தி விடும், கோமியம் மிகச் சிறந்த கிருமி நாசினி என்ற அந்த நபர் நம்பக்கூடும் போன்ற உதாரணங்கள் ஏராளமாகக் கூறுகிறார். அவர் 1931 ல் கூறிய உதாரணங்களை இன்று வரை நடைமுறையில் காணமுடிகிறது, இது நாம் பகுத்து அறிவதற்கான அவசியத்தை உணர்த்துகிறது.
தேசியம், மதம். ஜாதி போன்றவற்றை திணிக்கும் எண்ணத்தோடு எந்தக் கல்வி திட்டத்தையும் வரையறுக்கக் கூடாது அதுவே மாணவர்களின் சுய சிந்தனையை வளர்க்கும் என்பதை அவர் அன்றே கூறியுள்ளார் ஆனால் அது இன்று வரை சாத்தியப்படவில்லை என்பது தான் நிதர்சனம். இன்றும் மறைக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. ஆசிரியர்களும் இவ்வித நோக்கத்தோடு இல்லாமல் மாணவர்களின் சுய சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.
பெண்ணியம்
பெண்ணியம் பேசும் ஆணை எந்தப் பெண்ணுக்கு தான் பிடிக்காது? பெரியார் பேசியதில் கால், அரை பங்கு பேசும் ஆண்களையே பெண்களுக்கு பிடிக்கும் பொழுது தீவிரமான பெண்ணிய கருத்தைப் பேசிய, பெண்களுக்காகப் போராடிய பெரியார் மீது காதல் வயப்படாமல் எந்தப் பெண்ணால் இருக்க முடியும்?
பெரியார் அதிலும் தனித்து நின்றார், ஆண், பெண் உரிமைக்காகப் போராடுவது சுத்த அயோக்கிய தனம் என்றார். பெண் உரிமைக்காகப் பெண் தான் போராட வேண்டும் என்று நம்பினார். பெண் அடிமைத்தனத்திற்குப் பெண்ணே காரணமாக இருக்கும் அவலத்தை விளக்கினார். ஆண், பெண் உரிமைக்காகப் போராடுவதை, பார்ப்பான் சூத்திரனுக்காக போராடுவதோடும், முதலாளி தொழிலாளி நலனுக்காகப் போராடுவதுடன் ஒப்பிட்டார். இதில் எப்படி விடுதலைக்கான வழியே இல்லையோ அதே போன்று பெண்ணுக்காக ஆண் போராடுவதிலும் விடுதலைக்கான வழியே இல்லை என்று அவர் சாடினார்.
கற்பு என்று ஒன்று இருப்பினில் அது பெண்ணுக்காக மட்டுமானதாக ஏன் இருக்க வேண்டும்? ஏன் ஆண் கற்புடையவனாக இருக்கக் கூடாது? போன்ற கேள்விகளை எழுப்பி இந்த தனியுடைமை சமூகத்தின் முகத்திரையைக் கிழித்தார். பெண் உண்மையில் விடுதலை அடைய வேண்டும் என்றால் அவள் பிள்ளை பெற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்றார் பெரியார். அப்பொழுது தான் பெண்களை இனவிருத்திக்கான கருவியாக பார்க்கும் நிலை மாறும் என அவர் உறுதியாக நம்பினார். ஆதலால் மனித இனமே அழிந்து விடும் என்றால் அதனால் பெண்ணுக்கு எந்த விதத்திலும் நட்டம் இல்லை போன்ற கசப்பான உண்மைகளைப் பிற்போக்குவாதிகளுக்கு தோலுரித்துக் காட்டினார். ஆண் இரண்டு காதலி வைத்திருந்தால் பெண் மூன்று காதலன் வைத்துக்கொள்வதில் என்ன தவறு இருந்துவிட முடியும் என்று அதீத முற்போக்குவாதம் பேசினார்.
பெண்ணுக்கான கல்வி, வேலை, தொழில் வாய்ப்புகள் போன்று அவர் பேசாத கருத்துக்களே இல்லை.
அவரது அதீத முற்போக்குவாதத்தாலும், தொலைநோக்கு பார்வையாலும் தான் இன்று என்னால் இதை எழுத (படிப்பு அறிவைப் பெற) மற்றும் பதிவிட (கருது சுதந்திரம்) முடிகிறது. இது வரை ஏதோ ஒரு செயலை செய்து விட்டு தமிழகம் உதாரணமாக நின்றால், உச்சி முதல் பாதம் வரை நட்டு நிற்கும் முடி “இது பெரியார் பொறந்த மண்ணு, அப்படி தான் இருக்கும்” என்று சொல்லி சிலாகிக்கும். ஆனால் இன்று மாறி வரும் இந்தச் சமூக சூழலில் நமக்கு ஈரோட்டு கை தடியின் அவசியம் இருக்கிறது. அழிந்துவரும் சுய மரியாதையையும், சமூக நீதியையும் நிலைநாட்டும் அவசியம் இருக்கிறது.

புதிய கல்வி கொள்ளை(கை)

One Team, One Heartbeat

பாஜக அரசின் மூன்று ஆண்டு கால சாதனை

ஆரிய திராவிட போர்

HAKUNA MATATA

Advertisements

One thought on “என்றும் பெரியார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s