பாஜக அரசின் மூன்று ஆண்டு கால சாதனை

assam_protest_759

Image credits google

பண மதிப்பு நீக்கம், மாட்டு இறைச்சி தடை, ஜல்லிக்கட்டு தடை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல், அதிமுகவை உடைத்தது, ஆளுநரை நியமிக்காமல் இருப்பது, போராளிகள் மீது குண்டர் சட்டம் போடுவது, எதிர்த்து கேட்கும் ஊடக நிர்வாகிகள் வீட்டில் சோதனையிடுவது, மாநில சுய ஆட்சிக்கு எதிராய் செயல் படுவது போன்ற பல சாதனைகளை படைத்த பாஜக அரசின் சாதனை பட்டியல் எல்லை இன்றி நீண்டு கொண்டே போகும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை அணைத்து தரப்பினருக்கும் சிக்கலை ஏற்படுத்தியது. இவர்கள் கோரிய படி கருப்பு பணம் அழிந்து விட்டதா என்றல் அதுவும் அழியவில்லை. அடிப்படையில் கருப்பு பொருளாதாரம் இருக்கிறதே தவிர கருப்பு பணம் என்று எதுவும் இல்லை. இது குறிப்பிட்ட பெரும் முதலாளிகள் மட்டும் பயன் அடைவதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும். ஒரே ஒரு ரூ.2000 தாளை பார்க்க பல மணி நேரம்  வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் நாம் காத்துக்கிடந்த அதே வேளை வங்கிக்கே வராத செல்வந்தர்களின் வீட்டில் கோடி கணக்கில் புது ரூ.2000 தாள்கள் சோதனையின் போது கண்டு அறியப்பட்டது. சரியாக தானே சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்று கேட்பவர்கள், சோதனைகள் யார் வீட்டில் நடந்தேறியது என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். பாஜகவை சாடியவர்கள் வீட்டிலும் அவர்கள் உடைக்க நினைத்த கட்சியின் பிரமுகர்கள் வீட்டிலும் தான் இந்த சோதனைகள் நடந்தேறியது. தனது மகளுக்கு ரூ.500 கோடி செலவில் திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர் ஜனார்த்தன் ரெட்டிவீட்டில் அல்ல.

மாட்டு இறைச்சி தடை, ஜல்லிக்கட்டு தடை போன்றவை நாட்டு மாடு இனங்களை அழிக்கும் ஏற்படாகவே உள்ளது. ஒரு பொருளை வாங்கவோ விற்கவோ அதாவது பயன் படுத்த தடை விதித்தால் அந்த இனமே அழிந்து விடும். கால் நடைகள் அழியும் அபாயத்தில் இல்லை, கடந்த 15 ஆண்டுகளில் கால் நடைகளின் எண்ணிக்கை கூடியுள்ளது. இப்பொழுது இறைச்சிக்கு தடை விதிப்பது திட்டமிட்டு வெளி நாட்டில் இருந்து பாலை இறக்குமதி செய்ய பின்னப்படும் சதி வலை ஆகும்.

பாஜகவை சார்ந்த ஒவ்வொரு நபரும் சர்ச்சைகுரிய கருத்தை சொல்வது பின்னர் அது அந்த குறிப்பிட்ட நபரின் சொந்த கருத்து கட்சியின் கருத்து அல்ல என்று மழுப்புவதையே அவர்கள் வழக்கமாக கொண்டு உள்ளார்கள். நீட் தேர்வினை கட்டாயம் ஆக்குவதும், நாம் சமூகநீதியோடு பெற்ற இடஒதிக்கீடை மறுப்பதும் அவர்களின் கோர முகத்தை காட்டுகிறது. ஒரு மத சார்பு நடவடிக்கைகள் எடுப்பதும் ஹிந்தியை திணிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை காவிமயம் ஆக்குவதற்கு அவர்கள எடுக்கும் முயற்சியின் வெளிப்பாடு தான்.

கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என்பது, பசு மட்டை தேசிய விலங்காக அறிவிப்போம் என்பது, ஒரு மொழி, ஒரு மதம், ஒரு மக்கள் என்று சொல்லுவது, அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி தீருவோம் என்பது இந்த மத வெறியர்களின் ஒரு மத சார்பினை அம்பலம் படுத்தி காட்டுகின்றது. இவர்கள் அரசு அமைக்க உதவிய வழக்கறிஞ்சர் ராம் ஜெத்மலானியே மோடியை நம்ப வேண்டாம் என்று கூறியது இவர்கள் ஆட்சியின் பெருமையை பேசுகிறது.

பெரும் முதலாளிகளுக்கு உதவுவதையும் மேலும் மேலும் மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவதையும் மட்டுமே கொள்கையாக வைத்து செயல் படும் பாஜக அரசு, இந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் அவர்களின் கொள்கையை நிலைநாட்டி சாதனை படைத்து இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆரிய திராவிட போர்

HAKUNA MATATA

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

கிறுக்கல்

Ai Birraany…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s