ஆரிய திராவிட போர்

1253970576-animal-sacrificed-during-durga-puja-celebration148887_148887

அன்று குரங்கு கூட்டம், அரக்கர்கள் என்று சொல்லியதில் துவங்கி இன்று காட்டுமிராண்டிகள் தேசவிரோதிகள் என்று சொல்லுவது வரை, அன்று தமிழை நீச பாஷை என்று சொல்லியதில் துவங்கி இன்று கருவறைக்குள் தமிழை அனுமதிக்காதது வரை, அன்று சம்ஸ்க்ருத கல்வியை மறுத்ததில் துவங்கி இன்று சமஸ்க்ருத திணிப்பு வரை, ஆரியம் திராவிடத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துகிறது, வஞ்சத்தை உமிழ்கிறது. ஆதிக்க மனோபாவத்தை கொண்டு திராவிடர்களை ஒடுக்கும், அழித்து ஒழிக்கும் செயலில் ஈடுபட்டு கொண்டுஇருக்கிறது. அதன் நீட்சி தான் இந்த மாட்டு இறைச்சி தடை சட்டம். மலையாளிகள் தனி திராவிட நாடு கேட்பதும், Facebook, Twitter போன்ற சமூக வலைத்தளங்களில் #தனி திராவிட நாடு ட்ரெண்டிங் ஆவதும், தனி திராவிட நாடு கோரிக்கை வலுப்பதும் நவீன யுக ஆரிய திராவிட போரின் துவக்க புள்ளி.

வரலாறு

Cszxu3NWgAAU3cW

கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மாடு மேய்த்து கொண்டு கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறியவர்கள்  தான் இந்த ஆரியர்கள். வந்ததில் இருந்து மனு தர்மம், மனு ஸ்ம்ரிதி, வேதங்களின் பெயரால் நம்மை ஒடுக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பொழுது நாம் என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்து நமது அடிப்படை உரிமையை பறித்துள்ளார்கள்.

மாட்டிறைச்சியை தடை செய்வதின் மூலம் வெளிநாட்டில் இருந்து பால, பால சார்ந்த பொருட்களின் இறக்குமதி அதிகரிக்கும். இது பெரும் முதலாளிகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டி தரும்.

விதிகள்

மாட்டிற்கு மூக்கணாங்கயிறு கட்ட தடை.

மாட்டிற்கு சரியான உணவு, குடிநீர், கூரை பாதுகாப்பு, கழிப்பிட வசதி அமைத்து தரவேண்டும் மற்றும் நெருக்கடி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் மற்றும் மருத்துவ வசதி செய்து தர வேண்டும்.

சந்தையில் இறைச்சிக்காக மாட்டை வாங்கவோ விற்கவோ கூடாது.

 

கயறு கட்டாமல் மாட்டினை பழக்க படுத்தவே இயலாது. இந்தியாவில் பல மனிதர்களுக்கே உணவு, குடிநீர், இருப்பிடம், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அடிமாடுகளுக்கு இவற்றை எதிர்பார்ப்பது நடைமுறை சாத்தியம் அற்ற ஒரு செயல். சந்தையை தவிர்த்து மற்ற இடங்களில் மாட்டினை வாங்குவதோ விற்பதோ சுலபமான காரியம் அல்ல. இவை அனைத்தும் நாட்டு மாடுகளை அழித்து ஒழித்து வெளிநாட்டில் இருந்து பால் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு.

தனி திராவிட நாடு கோரிக்கை வைப்பவர்கள் மறந்து விடுவது என்னவென்றால், இது அடிப்படையிலேயே ஒரு திராவிட நாடு என்பதை தான். “வெள்ளையனே வெளியேறு” என்று போராடியதை போல் “ஆரியனே வெளியேறு” என்று போராடுவது தான் சரியாக இருக்கும்.

HAKUNA MATATA

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

கிறுக்கல்

Ai Birraany…

மே தினம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s