ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

 

neet
Image credits Google

அரசின் தோற்றத்தில் இருந்தே அதன் நிலைப்பாடு மக்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது. மருத்துவ படிப்பு ஒரு விதி விலக்கு அல்ல என்பதை நிரூபிக்கவே நீட் எனப்படும் நேஷனல் எண்ட்ரன்ஸ் கம் எலிஜிபிலிட்டி டெஸ்டை பொதுமை படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் வரையறை மக்களுக்காக, மக்களால், மக்களுக்கான அரசில் இருந்து செல்வந்துருக்காக, செல்வந்தர்களால், செல்வந்தற்கானதாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கு மட்டும் அல்லாமல் பொறியியல் மற்றும் இதர தொழில் படிப்புகளுக்கும் நீட் தேர்வினை அறிமுகம் படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, இருக்கும் திட்டங்கள் போதாது என்று புதிய கல்வி கொள்கை வேறு. இதற்கு நாம் விரைந்து வினையாற்றா விட்டால் இத்திட்டங்கள் நம்மை மீண்டும் குல கல்வி முறைக்கு மாற்றவே வழி வகுக்கும்.

வாதங்கள்

நீட்டினை ஆதரிக்கும் பெரும்பாலானோர் முன்வைக்கும் கருத்து தங்களுக்கு தரமான மருத்துவர்கள் வேண்டும் என்பது தான் ஆனால் ஒரு மருத்துவர் படித்து முடித்து பயிற்சிக்கு பின்பே முழுமையான மருத்துவர் ஆகிறார் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். தரம் என்று வாதிடுவதற்கு முன்பாக அரசு பள்ளியின் தரத்தை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். சமச்சீர் பாடத் திட்டம் என்று வரும் போதும் சிபிஸ்இ எனப்படும் சென்ட்ரல் போர்டு ஆப் செகண்டரி எஜூகேஷனுக்கு இதில் விலக்கு உள்ளது. நீட்டில் கேட்கப் படும் பெரும்பாலான கேள்விகள் இந்த சிபிஸ்இ பாடத் திட்டத்தை சார்ந்தே உள்ளது. இந்த சிபிஸ்இ பள்ளிகளில் வசூலிக்க படும் கட்டணம் மற்ற பள்ளிகளை விட அதிகம். நீட் பயிற்சிக்காக நிறைய பயிற்சி மையங்கள் முளைத்து உள்ளன இது மற்றொரு வகையில் பணத்தை சுரண்டும் ஏற்பாடாக உள்ளது. இவர்களால் மேற்கோள் காட்டப்படும் ஐஐடீ, ஐஐம், எய்ம்ஸ் போன்ற பல உயர் நிலை கல்லூரிகள் உலக தர பட்டியலில் முதல் நூறு இடத்தில ஒன்றை கூட பிடிக்க முடியவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடால் நிறைய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தபட்ட பிரிவை சார்ந்த மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர், நீட்டால் இந்த நிலை மாற கூடும். இந்த நிலை தொடர்ந்தால் ஏழைகளுக்கு மட்டும் அல்ல மத்திய தர வர்க்கத்திற்கும் மருத்துவ படிப்பு எட்டா கனி ஆகிவிடும் அபாயம் உள்ளது.

பின்னணியில் இருக்கும் அரசியல்

“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்ற அண்ணாவின் வாசகத்தை இன்று வரை நம்மால் பொருத்தி பார்த்துக்கொள்ள முடிகிறது. பாஜகவினர் ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்து தங்களது காவி வெறி செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். காவி கால ஊன்ற முடியாத மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் விஷத்தை உமிழ்கிறார்கள். நாடு முழுக்க ஒரே நுழைவு தேர்வு என்று சொல்லிவிட்டு வெவேறு வினா தாள்கள் அளிப்பதும், விதி என்ற பெயரால், தேர்வு நடைபெறுமா நடைபெறாதா போன்ற பல குழப்பங்களோடு தேர்வு எழுத வரும் மாணவ மாணவியரின் உள்ளாடைகளை கிழித்து எறிவதும் இந்த அரசின் வஞ்ச முகத்தை காட்டுகின்றது. நம்மை நீட்டுக்கு எதிராய் வாதிடும் போக்கில் இருந்து மாற்றி நீட் தேர்வு நடைபெறும் முறைக்கு எதிராய் வாதிட வைத்ததே இந்த அரசின் மிக பெரிய சாதனை. அரசு எண்ணிய படியே நாம் நமது நோக்கத்தில் இருந்து சிதறி விட்டோம். அதனால் தரம் என்ற ஒற்றை கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் பல கோணத்தில் இருந்து இதனை ஆயவு செய்வது அவசியம் ஆகும்.

ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

3 thoughts on “ஏழைகளுக்கு எட்டா கனி ஆகும் மருத்துவ படிப்பு

Leave a comment